August 3, 2021

பழவேற்காட்டில் காமராஜர் 119 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கர்ம வீரர் காமராஜரின் 119வது பிறந்த தினவிழா நடைபெற்றது. பழவேற்காடு நாடார்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு 5 கிலோ அரிசி,5 கிலோ மதிப்புள்ள காய்கறிகள், சேலை வேட்டி மற்றும் பழவேற்காட்டில் காவல் பணியாற்றும் கூர்காக்களுக்கு மழைக்கோட்டு மற்றும் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பழவேற்காடு நாடார்கள் சங்க தலைவர் முத்துக்குமார் தலைமையில், சங்க செயலாளர் பெரியசாமி, பொருளாளர் முரளி கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed