August 6, 2021

திருவண்ணாமலையில், பொது கழிப்பறை பயன்பாட்டில் இல்லாததால், பொதுமக்கள் அவதி…

1 min read

திருவண்ணாமலை செங்கம் சாலை அரசு கல்லூரி எதிரே பொதுக்கழிவறை அமைந்துள்ளது. எனினும் தற்போது அந்த கழிவறை பராமரிக்கப்படாமல் பூட்டிக்கிடப்பதால் அங்கு வரும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்,

தற்போது அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் சுற்றவட்டார பகுதி மாணவ, மாணவியரின் பெற்றோர் தினசரி இங்கு வருகின்றனர். மேலும், திருவண்ணாமலை நகர பொதுமக்கள் அதிகமாக இங்கு வருகின்றனர். கழிவறை பூட்டிக்கிடப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில், அங்குள்ள கழிவறை பூட்டிக்கிடப்பதால் பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, உடனடியாக இந்த கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொது மக்கள் எதிரர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed