August 3, 2021

திருவள்ளூர் மாவட்டத்தில், திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் சிறப்பு முகாமை, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்…

1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் தங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, மற்றும் ஆதார் அட்டை, ஆகியவை வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து வந்தனர். அதை தொடர்ந்து திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம் அமைத்து அதன் மூலம் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது.

அதில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு முகாமை தொடங்கி
வைத்தார். மேலும், திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கூறும் போது, இம் மாவட்டத்தில் நமது கணக்கெடுப்பில் இது வரை 258 திருநங்கைகள் உள்ளனர். தற்போது கூடுதலாக 138 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், திருநங்கைகளுக்கு கோட்டம் வாரியாக சிறப்பு முகாம் அமைத்து, அடையாள அட்டைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி இன்று திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய கோட்டங்களில் சிறப்பு முகாம் அமைத்து அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன என்றார். இந் நிகழ்ச்சியில், திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் சமூகநலத்துறை அலுவலர் ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் – மேத்யூ
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed