July 28, 2021

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின், 16மதகுகளின் பவளவிழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது…

1 min read

திருவள்ளூர் அடுத்த
பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில், 16 மதகுகளை கட்டி 75 ஆண்டு நிறைவு பெற்றதால், முன்னாள் சென்னை
மேயர் சத்தியமூர்த்தி அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 75 வது ஆண்டு பவள விழா வெகு சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.சித்ரா ரமேஷ் அவர்கள் சொந்த செலவில், இந் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடுகள் செய்து இருந்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் பூண்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர் படை சார்பாக, நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதனை அடுத்து பூண்டி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தின் இயக்கத்தை அவர் தொடங்கி வைத்தார். மேலும், பூண்டியில் அமைந்துள்ள முன்னாள் மேயர் சத்தியமூர்த்தி அவர்களின் திருவுருவ சிலைக்கு திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மற்றும் பூண்டி அரசு மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் என அனைவருக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டது. அதனையடுத்து திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி ஜி ராஜேந்திரன் மற்றும் பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ரமேஷ் பூண்டி ஒன்றிய கழக செயலாளர் கிறிஸ்டி (என்ற) அன்பரசு பூண்டி ஒன்றிய துணை பெருந்தலைவர் மகாலட்சுமி மோதிலால் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் மோதிலால் என அனைவரும் இந்நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு மீனவர்கள் முன்கள பணியாளர்கள் என்று 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் அத்தியாவசியமான பொருட்களை வழங்கி
கௌரவித்தனர்.

மேலும், இந் நிகழ்ச்சியில் செல்வம், கணேஷ் குமார், சிட்டி பாபு, எம்.எஸ்.ராஜா, மீன்ஜெயபால், எம்.எஸ் அருண்குமார்,
பங்காருபேட்டை பழனி, வி.கிருபானந்தன்,
ஆர். புவனேஷ், ஆர்.அருண், திவாகரன்ஆகியோர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

செய்திகள் – மேத்யூ
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *