August 6, 2021

திருவண்ணாமலை மாவட்டத்தில், உழவர் சந்தைகள் இன்று முதல் திறப்பட்டதால், உழவர் சந்தையில், மாவட்ட ஆட்சி தலைவர் விழிப்புணர்வு பிரச்சாரம்…

1 min read

திருவண்ணாமலை ரவுண்டானா பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்கின்ற நோக்கத்தில் அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

திருவண்ணாமலை ரவுண்டானா பகுதியில் கூலி வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள வட்டங்களில் நின்று கொண்டிருக்க வேண்டும் பேருந்து வந்த பின்னர் மட்டுமே அந்த இடங்களை விட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்றும் கூறினார். அப்போது அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கூலி தொழிலாளர்களுக்கு இரண்டு மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதற்குள் ஆதார் கார்டு கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால், அவர்களை வேலைக்குச் செல்ல அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.

வீட்டில் உள்ள குழந்தைகள் எந்த தவறும் செய்யவில்லை அதனால் நீங்கள் செய்கின்ற தவறுக்காக குழந்தைகளுக்கு கொரோனா தோற்று ஏற்படுத்தி அவர்களை தண்டிக்காதீர்கள் என்றும் தெரிவித்தார்.
பேருந்துகளில் பயணம் செய்தவர்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்தார்.

பின்னர், இன்று முதல் உழவர் சந்தைகள் திறக்கப்படுவதால் உழவர் சந்தைக்கு சென்று விவசாயிகளிடம் கோரோனோ தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தினார்.
காய்கறி கடைகளை இடைவெளிவிட்டு அமைக்குமாறு அறிவுறுத்திய மாவட்ட ஆட்சித்தலைவர் உழவர் சந்தையை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணியாவிட்டால் அவர்களுக்கு எந்த பொருளும் விற்பனை செய்யக்கூடாது என்றும் விவசாயிகளிடம் தெரிவித்தார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed