August 6, 2021

திருவள்ளூர் மாவட்டத்தில், அனைத்து கோவில்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு கலந்து கொண்டு கும்பாபிஷேக பணிகள் குறித்து கோவில் அறங்காவலர் குழுவிடம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, 12 ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறாமல் உள்ள சிறுவாபுரி முருகன் கோவில் பழமை மாறாமல் புனரமைக்கப்பட உள்ளதாகவும், 2 கோடியே 38 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கோவில் குளத்தை சீரமைக்க உள்ளதாகவும், மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் எனவும் தெரிவித்த அவர்.

இதுவரை சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான கோவில் நிலமும், 600 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துக்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும், கோவில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான புகார்கள் குறித்து விசாரிப்பதற்காக மாதம் தோறும் இந்துசமய அறநிலையத்துறையை ஆணையர் மற்றும் துணை ஆணையர் ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அதனடிப்படையில் ஆக்கரமிக்கப்பட்ட கோவில் நிலங்கள், மற்றும் சொத்துக்கள் அனைத்தும் ஓராண்டுக்குள் மீட்கப்பட்டு அதற்கான பட்டியல் வெளியிடப்படும் எனவும்,

வருவாய் இன்றி பூட்டிக் கிடக்கும் கோவில்களில் போதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அன்றாட வழிபாடுகள் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பக்தர்கள் அதிக அளவில் கூடும் கோவில்கள் மட்டுமின்றி அனைத்து கோவில்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பி. கே. சேகர்பாபு தெரிவித்தார்.

முன்னதாக எருமை வெட்டி பாளையத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு அதன் புனரமைப்பு தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, சோழவரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜாத்தி செல்வசேகரன், திமுக ஒன்றிய செயலாளர்கள், எல்லாபுரம் மூர்த்தி, பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், ஊராட்சி மன்றத் தலைவர் ஜான்சிராணி ராஜா, கோவில் செயல் அலுவலர் நாராயணன், பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் செல்வம், வட்டாட்சியர் மணிகண்டன், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed