July 28, 2021

குரோம்பேட்டையில், அரிசி வியாபாரி வெட்டி கொலை, வியாபாரிகள் சங்க நிர்வாகி கார்திகேயன் தலைமையில் வியபாரிகள் சாலை மறியல்…

1 min read

குரோம்பேட்டை ஜி எஸ் ரோடு பகுதியில் அடிக்கடி வியாபாரிகளிடம் சிலர் தொடர்ந்து மாமூல் கேட்டு மிரட்டி வந்த சூழ்நிலையில், சமீபத்தில் அதை தட்டிக் கேட்ட வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் , அதே பகுதியில் ஆனந்தராஜ் என்பவர் அரிசி கடை வைத்து வியாபாரம் செய்து வந்து கொண்டிருந்தார். அவர் அப்பகுதியில் வியாபாரிகள் சங்கத்தில் பொறுப்பாளராகவும் இருந்து வந்த நிலையில், இப்பகுதியில் அடிக்கடி ஒரு சிலர் மாமுல் கேட்டும், செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்ய சொல்லியும் வியாபாரிகளை மிரட்டியும், தாக்கியும் வந்திருப்பது தொடர்கதையாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், தற்போது அரிசி கடை வியாபாரி ஆனந்தராஜ் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, வியாபாரி சங்கத்தினரும் சமுதாய பிரமுகர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும்,
தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரவை நிர்வாகி கார்த்திகேயன் தலைமையில் ஆவேசமடைந்த வியாபாரிகள், உண்மை கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே, போலீசாரும் வியாபாரிகள் சங்க மூத்த நிர்வாகிகளும் சாலை மறியலில் ஈடுபட்ட கார்த்திகேயன் மற்றும் வியாபாரிகளை சமாதானம் செய்ததை தொடர்ந்து வியபாரிகள் சாலை மறியலை கைவிட்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இந்த குரோம்பேட்டை பகுதியில் வியாபாரிகள் மிரட்டுவதும், தாக்கப்படுவதும் தொடர்கதையாக இருந்துள்ளது. அப்போதே காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால், ஆனந்தராஜிக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை, அவரை சமூக விரோதிகள் வெட்டிக்கொலை செய்யும் அளவிற்கு துணிச்சல் வந்திருக்காது. காவல்துறையினர் இப் பகுதி வியாபாரிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

இந்த வழக்கில் தற்போது சிலர் காவல்துறையினரிடம் ஆஜராகி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என வியாபாரிகள் தரப்பில் கூறப்படும் நிலையில், போலீசார் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும். எனவும், தமிழக அரசு வியாபாரிகளை மிரட்டிம், அச்சுறுத்தியும், தாக்கியும், வரும் ரவுடிகள் இடமிருந்து பாதுகாக்க, தனி சட்டம் இயற்ற வேண்டும் எனவும், இறந்த ஆனந்தராஜின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும் எனவும், கேட்டு கொண்டார்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *