August 6, 2021

பழவேற்காட்டில் வீட்டிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பஜார் பகுதியில் பன்சர் கடை நடத்தி வருபவர் ஷாஜஹான்(65).இவர் வீட்டிலேயே சாராயம் காய்ச்சுவதாக திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் மஹிதாவுக்கு வந்த தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து,
ஷாஜஹான் வீட்டில் சோதனையிட்ட போது, 2 பேரல்களிலும், 2 பானைகளிலும் சாராய ஊறல் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், 20 லிட்டர் சாராயம் கேன்களில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், ஷாஜஹானை 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed