August 3, 2021

பொன்னேரி பேரூராட்சியில் எம்எல்ஏ துரை சந்திரசேகர், மழைநீர் தேங்கி சகதியாய் கிடந்த சாலைகளை ஆய்வு செய்தார்…

1 min read

பொன்னேரி பேரூராட்சி சாலைகளில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பதை பொன்னேரி எம்எல்ஏ துரைசந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொன்னேரி பேரூராட்சியில் 18 வார்டுகளில் 200, க்கும் மேற்ப்பட்ட தெருக்களில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். பொன்னேரி பேரூராட்சியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், பேருராட்சி மக்களுக்கு பாதாள சாக்கடை திட்டம் ஏற்படுத்தி கொடுப்பது என முடிவு செய்யப்பட்டு அதன்படி, 54 கோடி ரூபாய் மதிப்பில் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது.

அந்தப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் சாலையின் நடுவே பள்ளங்கள் உருவாக்கப்பட்டு சாலைகள் மண் சாலைகளாக மாறி உள்ளது. என்.ஜி.ஓ நகர், பாலாஜி நகர், மூகாம்பிகை நகர், உள்ளிட்ட பகுதிகளிலும் பொன்னேரி முக்கிய வீதிகளிலும் பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கப்பட்ட பள்ளங்கள் பெரிய அளவில் இருப்பதினால் அதில் மழைநீர் தேங்கி நின்று கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதிலும் இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும் போதும் விபத்துக்கள் ஏற்படும் அளவிற்கு அனைத்து தெருக்களும் மிகவும் மோசமாக உள்ளது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடர் மழையால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளித்து வருகிறது. இந்நிலையில், பொன்னேரி எம்எல்ஏ துரைசந்திரசேகர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறியும் கூட்டம் நடைபெறுவதாக அறிவித்து நேற்று காலை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலைகளை சீரமைத்து தரக்கோரி, பொதுமக்கள் நேரில் புகார் கூறியதுடன் மனுக்களையும் எம்எல்ஏ துரைசந்திரசேகரனிடம் வழங்கினர்.

இதனையடுத்து, பொதுமக்கள் கூறிய புகாரின் அடிப்படையில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் பொன்னேரி பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசை அழைத்து கொண்டு பொன்னேரி பேரூராட்சி திருவாயர்பாடி பகுதியில் உள்ள லட்சுமியம்மன் கோவில் 1வது, 2வது தெருக்களில் மழைநீர் தேங்கி உள்ள சேரும் சகதியுமாக கிடந்த சாலைகளையும், பொன்னேரி அகத்தீஸ்வரர் திருக்கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மதில் சுவர் இடிந்து விழுந்ததும், திருக்குளத்தில் சாக்கடை நீர் கலந்து இருப்பதையும் பார்வையிட்டார்.

பின்னர், என்ஜிஓ நகரில் சேரும் சகதியுமாக இருக்க கூடிய சாலைகளை பார்வையிட்டதுடன், முன்னாள் கவுன்சிலர் ஜோதீஸ்வரன் மற்றும் ராஜேஷ் ஆகியோர் கோரிக்கையை ஏற்று, அப்பகுதியில் பல வருடங்களாக மக்களுக்கு பயன்பாடு இல்லாமல் கிடக்கும் நியாய விலைக்கடை யையும் பார்வையிட்டார். மேலும், பொன்னேரி பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் நேரில் சென்று எம்எல்ஏ துரைசந்திரசேகர் ஆய்வு ஆய்வு செய்தார். அப்போது செயல் அலுவலர் வெற்றிஅரசு, வழக்கறிஞர் கார்த்திக் மற்றும் காங்கிரஸ் கட்சியினர், பொது மக்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed