August 6, 2021

பெரியபாளையம் அருகே, கன்னிகைபேர் இந்தியன் வங்கியின், மேலாளரை கண்டித்து வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்.

1 min read

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதியில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வங்கியில் பணப்பரிமாற்றம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வங்கியை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள் மேலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 100நாள் பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், முதியோர்கள் என வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களை மேலாளர் தரக்குறைவாக பேசி வருவதாக குற்றம் சாட்டினர்.

மேலும் சுயதொழில் தொடங்குதல், விவசாயம் உள்ளிட்ட தேவைகளுக்கு மேலாளர் வங்கிக்கடன் தர மறுப்பதாகவும் புகார் தெரிவித்தனர். மேலாளரை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் போலீசார் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

செய்தியாளர் – சீனிவாசன்
நியூல் . இன் – 8949476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed