August 6, 2021

மீஞ்சூர் அருகே, கல்பாக்கம் ஊராட்சியில், “விதை விதைப்போம் வா…” நிகழ்ச்சியில், அதிகாரிகள் பங்கேற்பு…

1 min read

மீஞ்சூர் பகுதியை சேர்ந்த பத்திரிக்கையாளராக பணியாற்றி வரக்கூடிய கஜேந்திரன் என்பவர். இயற்கை ஆர்வலராக இருந்து, பல விதமான இயற்கையை பாதுகாக்கும் பணிகளை செய்து வருகிறார். அதேபோல், தற்போது மீஞ்சூர் மற்றும் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரி கரைகள் மற்றும் நீர் நிலைகளில் புளியமரம் விதைகளை விதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, இன்று மீஞ்சூர் அடுத்த கல்பாக்கம் ஊராட்சியில், “விதை விதைப்போம் வா” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, கல்பாக்கம் ஏரிக்கரையிலும், கல்பாக்கம் நெய்தவாயல் சாலையிலும் மீஞ்சூர் ஒன்றிய கிராம ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி தலைமை தாங்கி, புளியங்கொட்டை விதைகளை விதைத்தார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் பிரியங்காதுரைராஜ் ஊரக வளர்ச்சித் துறை பொறியாளர்கள் செந்தில்குமார், ஜாஸ்லின், பணி மேற்பார்வையாளர்கள் அனுசுயா, சதீஷ்குமார், ஊராட்சி செயலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதனை அடுத்து தோட்டக்காடு ஏரிக்கரை, தேவதானம் சாலை சுடுகாடு, பகுதிகளிலும் புளியங்கொட்டை விதைகள் விதைக்கப்பட்டது.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed