September 16, 2021

செங்குன்றம் சோதனை சாவடியில், ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான, கஞ்சா பறிமுதல், இருவர் கைது…

1 min read
Spread the love

செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூர் சோதனைச் சாவடியில், நேற்று இரவு  செங்குன்றம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர், அப்போது, ஒரு காரை போலீசார் மறித்து சோதனை செய்தனர். அதில், பல பேப்பர் பைகளால் ஆன பார்சல்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதுகுறித்து காரில் வந்த நபர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். அதனால் போலீஸார் காரை முழுவதுமாக சோதனை செய்ததில், பார்சல்கள் அனைத்தும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட  120 கிலோ கஞ்சா பார்சல்கள் என தெரியவந்தது.

மேலும், போலீசார் விசாரணையில் காரில் கஞ்சாவை கடத்தி வந்தவர்கள்
தேனி அருகே உள்ள கம்பத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்காக, விசாகப்பட்டினத்தை சேர்ந்த சூரியபிரகாஷ் என்பவரிடம் இருந்து, 120 கிலோ கஞ்சாவை காரில் மறைத்து வைக்க கடத்தி வந்துள்ளனர் என்பதும், கஞ்சாவை காரில் கடத்தி வந்த, தேனி மாவட்டம் உத்தம பாளையத்தை சேர்ந்த பாண்டியன் (34)  சதீஷ்குமார் (38) ஆகியோரை   பாடியநல்லூர் சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல் துறையினர்
கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 120 கிலோ கஞ்சாவை  பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து செங்குன்றம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியார் – பரத்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed