September 26, 2021

திருவண்ணாமலையில், இருளில் மூழ்கிய கிரிவலபாதை, மலை சுற்றும் பக்தர்கள் அவதி…

1 min read
Spread the love

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தீபத்திருவிழா மற்றும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். இதன் காரணமாக தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், மற்றும் தொண்டு நிறுவனங்கள், கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான பல்வேறு தேவைகளை நிறைவேற்றி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கிரிவலப்பாதை 14 கிலோமீட்டர் முழுவதும் மின்விளக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த இரண்டு நாட்களாக கிரிவலப்பாதையில் மின் விளக்கு எரியாததால், கிரிவலப்பாதை இருளில் மூழ்கியுள்ளது. இதனால் கிரிவல பாதையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அவதியுடன், வேதனை அடைந்து வருகின்றனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed