September 25, 2021

திருவள்ளூர் அருகே தனியாக சென்று கொண்டிருந்த 12 வயது சிறுமியிடம், தவறாக நடத்து கொண்ட, கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது …

1 min read
Spread the love

திருவள்ளூர் அடுத்த காக்களூர் – புட்லூர் சாலையில் வசித்து வருபவர் முருகன் (56). இவர் கட்டிட தொழிலாளி. அவர் தனது வீட்டின் அருகே தனியாக சென்று கொண்டிருந்த 8 ம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமியை கட்டிப் பிடித்து உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார்.
இதனால், அதிர்ந்து போன அந்த சிறுமி வீட்டிற்கு சென்று, தனது தாயிடம் தனக்கு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.

உடனே, சிறுமியின் தாய் முருகனிடம் தனது மகளிடம் அவர் நடந்து கொண்ட தவறான நடவடிக்கை குறித்து கேட்டபோது, அதற்கு அந்த சிறுமியின் தாயையும் முருகன் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி, அந்த இடத்திலிருந்து விரட்டி உள்ளார். 

இது குறித்து சிறுமியின் தாய் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முருகன் அந்த ஊரில் இல்லாமல் தலைமறைவாக என்று தெரியவந்தது போலீசார் தொடர்ந்து விசாரணை செய்தது, பட்டாபிராம் பகுதியில் பதுங்கியிருந்த முருகனை  போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

பின்னர், திருவள்.ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், முருகன் புழல் சிறைச்சாலைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டார்.

செய்திகள் – மேத்யூ
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed