September 25, 2021

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி அளித்து வரும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாடு சமூக பாதுகாப்புத் துறை அலுவலர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்…

1 min read
Spread the love

தமிழ்நாடு சமூகப் பாதுகாப்புத்துறை அலுவலர் சங்கம், தென்மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகுகளுக்கான பணியாளர்களின் சங்க இணைப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.

தமிழ்நாடு சமூக பாதுகாப்பு துறை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், 16 மாவட்டங்களைச் சேர்ந்த சமூக பாதுகாப்புத் துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.

அதில், கொரானா காலத்தில் தாய் தந்தை களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகை அவர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் சமூகப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி அளித்து வரும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், தமிழகத்தில் 2012 முதல் சமூக பாதுகாப்புத்துறை மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், 32 மாவட்டங்களில மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் தலைமையில் 11 பணியாளர்கள் வீதம் 352 பேர் ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிகின்றனர்.

சமூக பாதுகாப்பு துறையில் பல்வேறு பொறுப்புகளில் காலமுறை சம்பளத்தில் பணிபுரியும் பணியாளர்கள் கூடுதல் பொறுப்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள் இவர்களை காலமுறை ஊதியத்தில் பணியாற்ற பணி வரன்முறை செய்ய வேண்டும் என சமூக நலத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவரும் தமிழக முதல்வரிடம் இது குறித்து பேசி நல்ல முடிவை விரைவில் தமிழக முதல்வர் அறிவிப்பார், என சமூக நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு நன்றி எனவும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

செய்திகள் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed