September 25, 2021

ராஜபாளையம் தொகுதியில், குறைந்த மின்னழுத்த தடை பிரட்சனைக்கு கூட, நேரடியாக அதை தீர்த்து வைத்த தங்கப்பாண்டியன் எம்எல்ஏவை, மக்கள் பாராட்டினர்…

1 min read
Spread the love

இராஜபாளையம் தொகுதி, கிருஷ்ணாபுரம் ஊராட்சியில், தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வந்தது. அதுகுறித்து, பொது மக்கள் மற்றும்
நாடார் உறவின்முறையை சார்ந்தவர்கள்
தங்கபாண்டியன் எம்.எல்.ஏ அவர்களிடம் நேற்று (24.07.2021) கிருஷ்ணாபுரம் ஊராடசியில், குறைந்த மின் அழுத்தத்தின் காரணமாக, அடிக்கடி மின்தடை ஏற்பட்டு, அதனால் மின் பற்றாக்குறை நிலவும் சூழ்நிலையால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர் என முறையிட்டனர்.

இதனையடுத்து எம்எல்ஏ தங்கபாண்டியன் அவர்கள் உடனடியாக, மின் வாரிய உயர் அதிகாரிகளை அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மின் பற்றாக்குறையை சரி செய்ய கேட்டுக்கொண்டார். அதன்படி இன்று (25.07.2021)காலை மின்சார வாரிய அதிகாரிகளை வரழைத்து, அவர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு, மின் பற்றாக்குறையை சரி செய்து சீராக மின்சாரம் வழங்க (100kv) உயர் மின் அழுத்தம் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் எனவும், அதன் பணிகளை ஒரு வாரத்துக்குள் விரைந்து முடிக்குமாறு எம்.எல்.ஏ கேட்டுக்கொண்டார். ” இந்த மின்தடை பிரச்சனையை, ஒரு வாரத்தில் தீர்த்து வைப்பதாக,” மின்வாரிய அதிகாரி திருநாவுக்கரசு அவர்கள் உறுதி அளித்தார்.

மின்தடை பிரச்சனைகளுக்கு கூட, ஒரு சட்டமன்ற உறுப்பினர் நேரடியாக களத்திற்கு வந்து, அந்த பிரச்சனையை உடனடியாக தீர்த்து வைத்தது, அப்பகுதி மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. அதனால், அப்பகுதி மக்கள் அனைவரும் தங்கபாண்டியன் எம்எல்ஏவை பாராட்டி மகிழ்ந்தனர். இந்நிகழ்வில், ஊர் தலைவர் தங்கமாரிப்பன் கிளை செயலாளர் லட்சுமணன் காமராஜ் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள், நாடார் உறவின்முறையை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

செய்திகள் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed