September 25, 2021

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில், மரகன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ள எண்ணூர் காமராஜர் துறைமுக வளாகத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை ( சி.ஐ.எஸ்.எப் ) காமராஜர் துறைமுகம் எண்ணூர் பிரிவின் துணை கமாண்டர் அனில் குமார் அவர்களின் தலைமையில் பாதுகாப்பு படையினரும், வீரத்தமிழர் பர்மா சிலம்பாட்ட. கலைக்கூட மாணவ – மாணவிகளும் இணைந்து மரச் செடிகள் நடும் நிகழ்ச்சி நடத்தினர்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு எண்ணூர் சி.ஐ.எஸ்.எப். படைவீரர்கள் தங்கும் வளாகத்தில், 1000 மரக்கன்றுகள் நட்டு, நாட்டின் வளம் காக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துக்
கொண்டனர். வீரத்தமிழர் சிலம்பாட்ட கலை கூட மாஸ்டர்கள் குட்டி, உசேன், விஜய் ஆகியோருடன் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed