September 26, 2021

திருவண்ணாமலையில், இரண்டாம் வகுப்பு பயிலும் 7 வயது சிறுமி, பேப்பர் கப் மீது அமர்ந்து யோகாசனம் செய்து அசத்தினார் …

1 min read
Spread the love

திருவண்ணாமலை நகரின் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள திருவருட்பா ஆசிரமத்தில் மை பஸ்ட் ஸ்கூல் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் 7 வயது சிறுமி சமந்தா அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும், கொரோனா மூன்றாம் அலையை பாதுகாப்புடன் காத்துக்கொள்ளவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருக்குறளின் 133 அதிகாரத்திற்கு 133 யோகாசனங்கள் செய்து உலக சாதனை முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

முதலில் சிறுமி சமந்தா பேப்பர் கப் மீது அமர்ந்து பல்வேறு ஆசனங்களை செய்து பின்னர் 133 அதிகாரத்திற்கு பத்மாசனம், தாடாசனம், யோகமுத்திராசனம், பர்வதாசனம், ஏகபாதசிரசாசனம், மச்சாசனம், நடராஜ ஆசனம், உத்தானபாத ஆசனம், புஜங்காசனம், உஷத்ராசனம், ராஜகபடாசனம், பாக்காசனம் உள்ளிட்ட 133 ஆசனங்களை 32 நிமிடத்தில் செய்து உலக சாதனை முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed