September 25, 2021

திருவண்ணாமலையில், பெண்ணை கடத்தி வந்த இளைஞர்கள் கைது…

1 min read
Spread the love

வேலூர் மாவட்டம் விருப்பாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பவன்கல்யாண், விக்னேஷ், போளூர் பகுதியை சேர்ந்த நந்தகுமார் ஆகியோர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வேப்பேரி பகுதியில் வேலை செய்து வந்தனர்.

அப்போது, நாளடைவில் அப்பகுதியில் வசித்து வந்த மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று அந்த மாணவி திடீரென மாயமானதால், இந்த இளைஞர்கள் மீது சந்தேகம் அடைந்த உறவினர்கள், அவர்களை தேடி பார்த்ததில் அவர்களும் தலைமறைவானது தெரியவந்தது. அந்த இளைஞர்கள் மீது ஏற்கனவே சந்தேகம் அடைந்த பெண்ணின் உறவினர்கள் முன்னதாக, திருவண்ணாமலை பகுதியில் இரவு முழுவதும் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அந்த மாணவியை நண்பர்கள் 3 பேரும் அதிகாலையில், மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தனர்.

ஏற்கனவே திருவண்ணாமலை பகுதியில் இருந்த மாணவியின் உறவினர்கள் அந்த மாணவியுடன் அழைத்து வந்த வாலிபர்களையும் சுற்றிவளைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கு இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் குமார், இளைஞர்களை பிடித்து பிரம்மதேசம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஒப்படைத்தார். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed