September 25, 2021

பழவேற்காட்டில், பேரிடர்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து, தீயணைப்புத் துறை நடத்திய செயல்முறை விளக்கப் பயிற்சி நடைபெற்றது…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் வடகிழக்கு பருவமழை காலங்களிலும் பேரிடர்களில் இருந்து எவ்வாறு மக்களை பாதுகாப்பது என்பது குறித்தும் செயல்முறை விளக்கப் பயிற்சி நடைபெற்றது.

பழவேற்காடு அருகே உள்ள கலங்கரை விளக்கம் பகுதியில் பக்கிங்காம் கால்வாய் மற்றும் பழவேற்காடு ஏரியில் பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம், வட்டாட்சியர் மணிகண்டன் முன்னிலையில், நடைபெற்ற இந்த பயிற்சியில் பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையிலான தீயணைப்பு துறையினர் துணிச்சலுடன் எவ்வாறு ஆபத்தில் உள்ளவர்களை காப்பாற்றுவது என்பது குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர்.

தீ விபத்தில் இருந்தும் மழை வெள்ளம் மற்றும் ஆறு, ஏரிகளில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பது குறித்தும் நடைபெற்ற தத்ரூபமான ஒத்திகையில் தீயணைப்பு வீரர்கள் பல்வேறு சாகசங்களை செய்தனர். மீன்வளத்துறை ஆய்வாளர் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் நடராஜன், கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed