September 25, 2021

பெரியபாளையம் அருகே, அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளர்கள் மாற்று இடம் வழங்க கோரிக்கை…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தில் எட்டியம்மாள், முனியம்மாள், பாஞ்சாலை, விஜயா ஆகிய 4பெண்கள் தோப்பு புறம்போக்கு நிலத்தில் கடந்த 50ஆண்டுகளுக்கு மேலாக குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.

கணவனை இழந்து ஆண் துணையின்றி 4 குடும்பங்களும் வசித்து வரும் நிலையில், திடீரென அதிகாரிகள் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டி உள்ளதால், இந்த வீடுகளை இடிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த 4குடும்பத்தினர் அதிகாரிகளிடம் முறையிட்டனர். தற்போது சாலை விரிவாக்க பணிகள் ஏதும் இல்லை எனவும், தங்களது வீடுகளுக்கு பின்புறத்தில் விவசாய நிலம் வைத்துள்ள தனி நபர் அவருக்கு பாதை வேண்டும் என்பதற்காக அதிகாரிகளை கொண்டு தங்களை அப்புறப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டினர்.

தங்களது வீடுகளை இடித்து வெளியேற்றினால் மாற்று இடம் செல்ல முடியாமல் வீதியில் நிற்கும் சூழல் ஏற்படும் எனவும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை எனவும் அதிகாரிகளிடம் முறையிட்டனர். அரசு அதிகாரிகள் தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி தந்து பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளட்டும் என தமிழக முதல்வருக்கு அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed