September 25, 2021

சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில், மோடி அரசை கண்டித்து, “காதில் பூ சுற்றி” நூதன ஆர்ப்பாட்டம்…

1 min read
Spread the love

மோடி தலைமையில் இயங்கும், ஒன்றிய அரசை கண்டித்து சாத்தூரில்,  சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் காதில் பூவைச் சுற்றிக் கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஏழரை ஆண்டுகளாக அனைத்து தொழில்களையும் பொருளாதார தோல்வியடைய செய்தது, பொதுமக்களின் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் செலுத்துவேன் என்று பொய்யான வாக்குறுதி அளித்தது. போன்ற பொது மக்களின் காதுகளில் பூ சுற்றும் மோடி அரசை கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள்  காதுகளில் பூ சுற்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசை கண்டித்து நடந்த இந்த கண்டன ஆர்பாட்டம், சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.எஸ்.அய்யப்பன் தலைமையில் சாத்தூர் தபால் நிலையம் முன்பு நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட  பொது செயலாளர் ஜோதி நிவாஸ் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.

விருதுநகர் மேற்கு மாவட்ட  செயலாளர் சந்திரன், கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சுப்பையா, விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசை கண்டித்து சாத்தூர் ஒன்றிய  செயலாளர் ரமேஷ்  கண்டன கோஷங்கள் எழுப்பினார். ஆர்பாட்ட ஏற்பாட்டை சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கும்கி கார்த்திக்  சிறப்பாக செய்திருந்தார்.

மாவட்ட பிரதிநிதி வெள்ளைச்சாமி, சிவாஜி மன்ற முன்னாள் தலைவர் காசி , ஐஎன்டியுசி வட்டார தலைவர் டெய்லர் மாரியப்பன், மேற்கு வட்டார தலைவர் சோலையப்பன், மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகம், டெய்லர்சுதர்சன், நகர மாணவரணி தலைவர் சங்கரபாண்டியன், நகர பொதுச்செயலாளர் ரவி , சத்திரப்பட்டி லட்சுமன பெருமாள், விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் கனகராஜ், படந்தால் பாலநாயக்கர், கிழக்கு வட்டார செயலாளர் பரதன், கோவிந்தராஜ், சூரங்குடி ஆறுமுகம், வெம்பக்கோட்டை இளைஞர் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் பனையடிப்பட்டி ஜெயக்குமார் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகளும் தொண்டர்களும் தங்கள் காதுகளில் பூச்சூட்டி கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – கண்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed