September 25, 2021

புழல் ஒன்றியம் விளாங்காடுபாக்கம் ஊராட்சியில், கொரோனா தடுப்பூசி முகாம்…

1 min read
Spread the love

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கொரோனா பரிசோதனை முகாம்களும், கொரோனா தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டதுடன், தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு கொரோனா பரவலைத் தடுக்கும் முறை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், சுகாதார துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, செங்குன்றம் அடுத்த புழல்  ஒன்றியம் விளாங்காடுபாக்கம்  ஊராட்சியில், கொரோனா இரண்டாம் அலை தடுப்பு நடவடிக்கையாக, பலமுறை பரிசோதனை முகாம்களும், தடுப்பூசி முகாமும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யபட்டு நடத்தப்பட்டது. அதேபோல், இன்றும் தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற வளாகத்தில் நடத்தப்பட்டது.

முகாமை, விளாங்காடுபாக்கம்  ஊராட்சி மன்ற தலைவர் பாரதிசரவணன்  தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பின்னர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய  மருத்துவர்கள் 18 முதல் 45 வயதுக்கு மேல் உள்ள   பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கும்,  மாற்றுத்திறனாளிகளுக்கும், கொரோனா தடுப்பூசியை செலுத்தி மாத்திரைகளை வழங்கினர்.

அதில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கலாவதி நந்தகுமார், வார்டு உறுப்பினர்கள் நாகராஜ், மாரி, தர்மிரவி, அருணாதேவி, சத்தியசீலன், நிலவழகிஇனியன், ரதிசீனிவாசன், மாரியம்மாள் நரசிம்மன், கிராம நிர்வாக அலுவலர் எஸ்தர் உட்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ப.பரத்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed