September 25, 2021

மாதவரம் சரகத்தில் சிறப்பாக பணியாற்றும், மாதவரம் துணை ஆணையாளர் சுந்தரவதனம் அவர்களுக்கு, இயற்கை பாதுகாப்பு குழுவினர் பாராட்டு…

1 min read
Spread the love

மாதவரம்  சரகத்தில் காவல் உதவி  ஆணையர், மற்றும் ஆய்வாளர்கள் துணையுடன், காவலர்கள் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்ட ஒழுங்கை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.

ஆகவே, செங்குன்றம் இயற்கை பாதுகாப்பு குழுவின் நிர்வாகிகள் சார்பில், மாதவரம் சுற்றுவட்டார சரகத்தில் உள்ள அனைத்து காவலர்களையும் பாராட்டும் விதமாக, மாதவரம் துணை ஆணையாளர் சுந்தரவதனம் அவர்களை நேரில் சந்திக்து, இயற்கை பாதுகாப்பு குழுவின் மாநில அமைப்பாளர் காஜா இப்ராஷிம், மாநில பொது செயலாளர் மாரியப்பன் ஆகியோர் தலைமையில் நேரில் சென்று, பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதில் சமூக ஆர்வலர்கள்  அப்துல்காதர், நாகூர் அனிபா மற்றும் இயற்கை பாதுகாப்பு குழுவின் பொறுப்பாளர்கள் அனைவரும் உடனிருந்தனர். 

செய்தியாளர் – ப.பரத்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed