September 25, 2021

தூத்துக்குடி மாவட்டத்தில், கொரோனாவின் மூன்றாவது அலையை கட்டுப்படுத்த, எஸ்.பி ஜெயக்குமார் விழிப்புணர்வு பிரச்சாரம்…

1 min read
Spread the love

தூத்துக்குடி தற்காலிக பழைய பேருந்து நிலையத்தில் கொரோனா 3ம் ஆலை பரவுதலை தடுக்கும் பொருட்டு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் விழிப்புணர்வு பலகைகளை எஸ்பி ஜெயக்குமார் இன்று திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் கொரோனா 3வது அலையை தடுக்கும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று தூத்துக்குடி தற்காலிக பழைய பேருந்து நிலைய புறக்காவல் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மூன்று இடங்களில் கொரோனா 3வது அலையை தடுக்கும் பொருட்டு அதில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பலகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று திறந்து வைத்தார்.

அதை தொடர்ந்து ஆட்டோ மற்றும் பேருந்துகளில் விழிப்புணர்வு பதாகை ஸ்டிக்கர்களை எஸ்பி ஜெயக்குமார் ஒட்டினார். பின்னர் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து முன் களப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்; கொரோனா 3வது அலையை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஆகஸ்ட் 1முதல் 7ம் தேதி வரை பொதுமக்களுக்கு மாவட்ட காவல் காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய புறக்காவல் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விழிப்புணர்வு பலகைகள் வைக்கப் பட்டு பேருந்து பயணிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், ஆடி மாதங்களில் கூட்டங்கள் அதிகமாக வரக்கூடிய திருச்செந்தூர் குலசை உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் ஆகஸ்ட் 1, 2, 3 மற்றும் 8ம் தேதி ஆகிய நான்கு நாட்கள் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்தார். அதுபோல ஆடி அமாவசை முன்னிட்டு கடற்கரை மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதிகளில் குளிப்பதற்கும், கூட்டம் கூடுவதற்கும், ஆடி அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் செய்வதற்கும் அனுமதி கிடையாது என்றார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed