September 25, 2021

ராஜபாளையத்தில், காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சார சைக்கிள் பேரணி நடத்தினர்…

1 min read
Spread the love

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.மனோகர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இராஜபாளையம் உட்கோட்டத்தில் காவலர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தினர். அதில், ராஜபாளையம் காவல் நிலைய காவலர்கள் பலர் அந்த சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர்.

காவலர்கள் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் பொருட்டும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இன்னல்களை களையும் பொருட்டும், போதைப் பொருளினால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதை எடுத்துரைக்கும் பொருட்டும், இந்த சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.

இந்த சைக்கிள் பேரணி, இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட்டில் இருந்து துவங்கி, தாலுகா ஆபீஸ், காந்தி சிலை, பழைய பேருந்து நிலையம் ,பெரியர் சிலை, புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் நிறைவு பெற்றது. இதில் இராஜபாளையம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வி.ராமகிருஷ்ணன் அவர்கள் காவல் ஆய்வாளர்கள், காவல் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed