September 16, 2021

நல்லூர் ஸ்ரீ நாகாத்தம்மன், ஸ்ரீ நாகமுனீஸ்வரர், புற்றுக்கோயில் வீரசுயரூபினி அம்மன் ஆலயத்தில், ஆடி திருவிழா

1 min read
Spread the love

செங்குன்றம் அடுத்த சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சி நாகாத்தம்மன் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன், ஸ்ரீ நாகமுனீஸ்வரர், புற்றுக்கோயில் அம்மன் மற்றும் வீரசுயரூபனி அம்மன்  ஆலயத்தில் ஆடி திருவிழாவை முன்னிட்டு  திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மாதவரம் தொகுதி சோழவரம் மேற்க்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னனி சார்பில், குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி சோழவரம் மேற்க்கு ஒன்றிய செயலாளர் முத்துராமன் தலைமையில்  நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.ஏழுமலை கலந்து கொண்டு பக்தர்களுக்கு குளிர்பானங்களை வழங்கினர். இதில் மாதவரம் தொகுதி செயலாளர் தமிழ்பிரபு,  மற்றும் நிர்வாகிகள் பாரதிகன்னப்பன்,  இடிமுரசு, ஜெயபிரகாஷ், வெற்றிவேல், முத்துபாண்டி, பேச்சுமுத்து, கோபி, பிரவின்குமார், நித்தியானந்தம் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

செய்தியாளர் – ப.பாரத்குமார் 
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed