September 26, 2021

பழவேற்காடு முகத்துவாரம் தூர்வாரும் பணி தொடங்கியது…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பழவேற்காடு பகுதியானது சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பகுதியாகும். மீனவ மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்தப் பகுதியில் ஒரே வாழ்வாதாரமாக இருப்பது முகத்துவாரம் ஆகும். தட்பவெப்ப சூழல் காரணமாக சமீப ஆண்டுகளாக முகத்துவாரம் அடிக்கடி தூர்ந்து போய் அடைந்துவிடுகிறது. இதனை நிரந்தரமாக அடையாமல் பாதுகாக்க வேண்டி தூண்டில் வளைவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இருந்தும் அதற்காக அரசு பல திட்டங்களை அறிவித்தும் நிரந்தர முகத்துவாரம் அமைக்கும் பணிகள் நீண்டகாலத் திட்டமாக உள்ளது.

இந்த நிலையில் புரட்டாசி மற்றும் ஐப்பசி காலங்களில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால் அதற்கு முன்னதாக முகத்துவாரத்தை ஆழப்படுத்தி முகத்துவாரம் அடைந்துவிடாமல் இருப்பதற்காக முகத்துவாரம் தூர்வாரும் பணி மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் சார்பில், ஊரக வளர்ச்சித் திட்டத்தில் துவங்கப்பட்டுள்ளது. இதற்கான பூஜை மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. இந்த பூஜையில் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி ஆணையர் ராமகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் தேசராணி தேசப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள் எம்.கேதமின்சா, செவ்வழதி எர்ணாவூரான், கதிரவன் மற்றும் பகுதி மீனவர் கூட்டமைப்பு தலைவர்கள், கிராம நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed