September 25, 2021

செங்கம் அருகே, கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் காயம், ஒருவர் பலி…

1 min read
Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த முறையாறு அருகே, ஓசூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசுப் பேருந்தும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற டொயோட்டா எட்டியோஸ் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில், ஒருவர் பலியானார்.

திருவண்ணாமலையிலிருந்து செங்கம் நோக்கி சென்ற காரில் உமேஷ் (43) என்பவர் காரை ஓட்டிச் சென்றார். அதில் பெங்களூரு பகுதியைச் சேர்ந்த விபுன் குப்தா மற்றும் அவரின் மனைவி அருஷி ஆகியோர் பயணம் செய்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த விபுல் குப்தா மற்றும் அருஷி ஆகிய இருவரும் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அங்கு விபுல் குப்தா உயிரிழந்தார். அவரின் மனைவி அருஷி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed