September 26, 2021

விடுதியில் இருந்து தப்பி வந்த மாணவனை மீட்டு, குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்த மாணவன் ரமேஷ், (15) தாய், தந்தை இருவரையும் இழந்த இந்த மாணவனை, உறவினர்கள் ஜவ்வாது மலையில் உள்ள அத்திப்பட்டு தனியார் பள்ளியில், விடுதியில் தங்கி படிக்க சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் அந்த விடுதியில், மாணவர்களுக்கு அதிக தொல்லை தருவதாக நினைத்து, நேற்று திங்கள் இரவு அந்த மாணவன் விடுதியில் இருந்து தப்பி, திருவண்ணாமலைக்கு வந்து, நகரப்பகுதியில் தனது உறவினர்களை தெருத்தெருவாக தேடி உள்ளான். இன்று செவ்வாய் அதிகாலை 2 மணிக்கு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.எஸ்.ஐ ஏழுமலை, காவலர் பெருமாள் ஆகியோர், தெருவில் சுற்றி வந்த மாணவனை மீட்டு, திருவண்ணாமலை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed