September 26, 2021

கும்மிடிப்பூண்டியில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், டி. ஜே. கோவிந்ராஜன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது…

1 min read
Spread the love

கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றம் மற்றும் உள்ளிட்ட பல்வேறு நலதிட்டங்களை தமிழகத்தில் செயல் படுத்தி வருவதற்காக பாராட்டு தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டது.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கும்மிடிப்பூண்டியில் மாவட்ட பொறுப்பாளரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்விற்கு திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் கி.வேணு, திமுக தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் சி.எச்.சேகர், பொறுப்பு குழு உறுப்பினர்கள் பகலவன், கதிரவன், எம்.எல்.ரவி, நிலவழகன், அன்புவாணன், சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் சாரதா முத்துசாமி, ராமஜெயம் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பேசுகையில் சனிக்கிழமை மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி தொகுதிகளில் அனைத்து ஊராட்சிளிலும் திமுகவினர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளை ஒட்டி அவரது படத்திற்கு மரியாதை செலுத்துவதோடு, மக்கள் நல திட்டங்களில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தியதோடு, கட்சி வளர்ச்சியில் நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் சிறப்பான பணியினை தொடர வேண்டும் என்றார்.

இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதற்கும், தமிழகத்தில் புதிய நலதிட்டங்களை செயல்படுத்தி வருவதற்கும் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தும், கரோனா காலத்தில் கும்மிடிப்பூண்டி , பொன்னேரி தொகுதிகளில் உயிரிழந்த திமுகவினருக்கு இரங்கல் தெரிவித்தும் தீர்மானம் இயற்றப்பட்டது.

கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் ஜெயச்சந்திரன், கௌரி ஹரிதாஸ், ஊராட்சி தலைவர்கள் கீழ்முதலம்பேடு கே.ஜி.நமச்சிவாயம், மாதர்பாக்கம் சீனிவாசன், சாணாபுத்தூர் அம்பிகா பிர்லா, திமுக நிர்வாகிகள் திருமலை, பாஸ்கரன், அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் -8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed