September 26, 2021

சேலம் அருகே, மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகளை தவிக்க விட்டு, கணவர் வேறு பெண்ணுடன் தலைமறைவு மனைவி போலீசில் புகார்…

1 min read
Spread the love

சேலம் மாவட்டம், சின்னகவுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் அவருடைய மனைவி மணிமேகலை (30) இவர், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது கணவர் தமிழரசன் மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில்,
எனக்கும் தமிழரசன் என்பவருக்கும் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் சேலைக்கு எம்ராடிங் போடும் வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில், எனது கணவருக்கும் பெத்தநாயக்கன் பாளையத்தை சேர்ந்த ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதுபற்றி நான் கேட்டதால், எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி எனது கணவர் எங்கள் வீட்டிற்கு வரவில்லை, திடீரென காணாமல் போய்விட்டார். விசாரித்ததில், அந்த பெண்ணுடன் அவர் தலைமறைவு ஆனது தெரியவந்தது. தற்போது நான் 3 குழந்தைகளுடன் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவித்து வருகிறேன். எனவே, எனது கணவரை கண்டுபிடித்து என்னுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் – தங்கதுரை
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed