September 26, 2021

பொன்னேரி சுற்றுவட்டார கிராமங்களுக்கு, பல வருடங்களாக இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளை, மீண்டும் இயக்க வேண்டி, எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் அதிகாரிகளுடன் ஆலோசனை…

1 min read
Spread the love

பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட பல குக்கிராமங்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த பல பேருந்துகள் பல ஆண்டுகளாக இயக்கப்படாத நிலையில் உள்ளது. அதனால் அப்பகுதி கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருவதாகவும், ஆகவே அந்த பேருந்துகளை எல்லாம் மீண்டும் இயக்க வேண்டும் எனவும், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரிடம் தேர்தல் பிரச்சாரத்தின் போது கிராம கோரிக்கை வைத்திருந்தனர்.

அதனடிப்படையில், இன்று பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொன்னேரி பேருந்து பணிமனை மேலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட அதிகாரிகளுடன், எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் ஆலோசனை நடத்தினார். அப்போது வழக்கறிஞர் மூர்த்தி காணியம்பாக்கம், தேவதானம், வேலூர் வழியாக இயக்கப்பட்டு வந்த பேருந்தும், ஆமூர் மாளிவாக்கம் பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த பேருந்தும் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர், என கூறினார்.

அதேபோல், அவுரிவாக்கம் முன்னாள் தலைவர் ராமதாஸ் கூறுகையில், “பாக்கம், அவரிவாக்கம், குப்பம் போன்ற கிராமங்கள் வழியாக இயங்ககூடிய பேருந்தை பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் நேரத்தை மாற்றி இயங்கச் செய்ய வேண்டும் எனவும், தினம் ஒருமுறை இயங்கக்கூடிய பேருந்தை கூடுதலாக மூன்று முறை இயங்கச் செய்ய வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார். மற்றும்
ஒன்றிய கவுன்சிலர் ஆறுமுகம் கூறுகையில், ” அண்ணாமலைச்சேரி வரை இயங்கக்கூடிய பேருந்து பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் இயக்கப்படுகிறது எனவும், அப்பேருந்தை மாற்றி, வேறு நல்ல பேருந்தை இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

அப்போது எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் அதிகாரிகளிடம், ” பொன்னேரி பணிமனையின் கீழ் இயங்கி கொண்டு இருந்த பல பேருந்துகள் பல ஆண்டுகளாக இயங்காததால், அரசூர் ரெட்டம்பேடு, பாக்கம் அவுரிவாக்கம், அண்ணாமலைச்சேரி, அனுப்பம்பட்டு, தேவதானம், காணியம்பாக்கம், வேலூர், மாளிவாக்கம், ஆமூர், போன்ற கிராம மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே, அவ்வழியாக இயங்கி கொண்டு இருந்த பேருந்துகள் அனைத்தும் பல வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த அனைத்து பேருந்துகளையும் மீண்டும் இயக்க வேண்டும்” என, கேட்டுக்கொண்டார்.

அப்போது பொன்னேரி பணிமனை அதிகாரிகள் தரப்பில், ” தேவதானம், காணியம்பாக்கம் மற்றும் அரசூர் ரெட்டம்பேடு, ஆமூர், மாளிவாக்கம் போன்ற கிராமங்கள் வழியாக இயங்கக்கூடிய பேருந்துகள் எல்லாம் மீண்டும் கூடிய விரைவில் இயக்குவதற்கு ஏற்பாடு செய்கிறோம் எனவும், தாங்கள் பெருங்குளம் ஆசனபுதூர், மடிமை கண்டிகை போன்ற சிறிய சாலை உள்ள குக்கிராமங்களுக்கு மினி பேருந்துகள் இயங்க ஏற்பாடு செய்கிறோம் ” எனவும் உறுதியளித்தனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed