September 26, 2021

செங்குன்றத்தில் குட்கா பான்மசாலா போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது…

1 min read
Spread the love

சென்னை அதன் சுற்று வட்டாரங்களில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை அதிகமானதை தொடர்ந்து அதனை  ஒழிக்கும் விதமாக சென்னை பெரு மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக  செங்குன்றம்  சுற்றுவட்டார அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்கம் சார்பில் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாரவாரிகுப்பம் பேரூராட்சி  சமுதாய நலக் கூடத்தில் குட்கா புகையிலை பொருட்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் செங்குன்றம் சுற்றுவட்டார அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வக்குமார் தலைமையில்  நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட புழல் சரக உதவி ஆணையர் ஆதிமூலம் குட்கா புகையிலை பொருட்கள் வியாபாரத்தை அறவே ஒழிக்க வேண்டும் மீறி யாரேனும் புகையிலை பொருட்கள் விற்பனை ஈடுபட்டால்  அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரிக்கை விடுத்தார். இதில்  செங்குன்றம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் எம்.சி.ரமேஷ் குற்றப்பிரிவு ஆய்வாளர் சித்தார்த் சங்கர் ராய்  வடசென்னை வடக்கு மாவட்ட வியாபாரிகள் சங்க தலைவர் வில்லியம்ஸ்,  செங்குன்றம் அனைத்து வியாபாரிகள் சங்க பொருளாளர் மாரியப்பன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.

செய்திகள் – ப.பாரத்குமார் 
நிழல் . 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed