September 26, 2021

பரமக்குடியில், 100 வயதை எட்டி 5தலைமுறைகளை கண்டு மகிழ்ந்த பாட்டி பாலம்மாள்…

1 min read
Spread the love

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஜவகர் வீதியை சேர்ந்த பாட்டி பாலம்மாள் இவருக்கு தற்போது வயது 100, ஐந்து தலைமுறைகளை கண்ட பாட்டி பாலம்மாளுக்கு இரண்டு மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனர்.

பாட்டியின் கணவர் சங்கரன் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது மகன் கனகசபாபதி வீட்டில் வசித்து வருகிறார் பாட்டிக்கு மகன் வழி மகள் வழி என பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன், கொள்ளு பேத்திகள், எள்ளுப்பேரன்கள் என நூறு பேர்கள் உள்ளனர். அவரது 100வது பிறந்தநாளை முன்னிட்டு 08-ந்தேதி அவரது மகன், மகள்கள் பேரன்கள், பேத்திகள் அனைவரும் குடும்பத்தோடு சென்னை, ராமேஸ்வரம், மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பரமக்குடிக்கு வருகை தந்து பாட்டியின் நூறாவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

.

அனைவரையும் தனது பிறந்த நாளில் கண்ட பாட்டி பாலம்மாள் மகிழ்ச்சியில் திகைத்துப் போனார். மகள்கள் கவிதைகள் பாடி பேரன் பேத்திகள் ஆட்டம் பாட்டம் ஆடி பாட்டியை உற்சாகப்படுத்தினர். நூறு வயதானாலும் பாட்டி பாலம்மாள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஆசீர்வாதம் செய்து வாழ்த்தினார். பிறந்தநாளையொட்டி, அனைவரும் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார். பாட்டி பாலம்மாள் இந்தத் தள்ளாத வயதிலும் தழிழ் ஆண்டுகள் நூறு ஆண்டுகளை மனப்பாடமாக தெளிவாகக் கூறி அனைவரையும் அசத்தினார்.

பாட்டியின் 100 -வது வயதை கேள்விப்பட்ட உறவினர்கள், நண்பர்கள், தோழிகள், அக்கம்-பக்கத்தில் உள்ள குடும்பத்தினர்கள் அவரிடம் ஆசி பெற்றுச் சென்றது பரமக்குடி நகரில் அபூர்வ நிகழ்ச்சியாக இருந்தது. மனதையும், உடலையும் திட காத்திரமாக பாதுகாத்து வரும் பாட்டி பாலம்மாள் போன்று நாம் அனைவரும் இருந்தால் நீண்ட ஆயுளை பெற முடியுமென்ற நம்பிக்கை எழுந்திருப்பதை கண் கூடாக காணமுடிந்தது.

செய்தியாளர் – மா.மு ஜெயக்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed