September 16, 2021

புழல் கதிர்வேடு ஸ்ரீ கெங்கையம்மனுக்கு, உலக மக்கள் நன்மை வேண்டி, 108 பால் அபிஷேகம்…

1 min read
Spread the love

செங்குன்றம் அடுத்த புழல் கதிர்வேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கெங்கையம்மன்  ஆலயத்தில் 18-ம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு  கொரோனா பெரும் தொற்றிலிருந்து உலக மக்கள் நன்மை வேண்டி, 108 பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி முன்னாள் புழல் ஒன்றிய காங்கிரஸ் பெருந்தலைவரும் ஆலய தர்மகர்த்தாவுமான வி.பர்ணபாஸ்  தலைமையில் நடை பெற்றது.

நிகழ்ச்சியில்  அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் விரதம் இருந்த பெண்கள் கொரோனா பெரும் தொற்றில் இருந்து உலக மக்கள் நன்மை  வேண்டி ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி ஸ்ரீ சீனிவாசபெருமாள் ஆலயத்திலிருந்து 108 பால் குடத்தை சிறசில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பின்னர், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் மற்றும்  சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை காண்பித்து உலக மக்கள் நன்மை வேண்டி நேர்த்தி கடனை பூர்த்தி செய்தனர்.   இதில் ஆலய நிர்வாகிகள்  உட்பட கிராம பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
முடிவில் ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு மங்கள பொருட்கள் மற்றும்  பிரசாதம்  வழங்கினர்.

செய்தியாளர் – ப.பாரத்குமார் 
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed