September 25, 2021

செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் கிராமத்தில், அருள்மிகு வடக்கு ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் ஆலயத்தின் ஆடி திருவிழா…

1 min read
Spread the love

.செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் கிராமம் கே.கே.நகரில் அமைந்துள்ள அருள்மிகு வடக்கு ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் ஆலயத்தில் 31-ம் ஆண்டு ஆடி திருவிழா ஆலய நிர்வாக தலைவர் எஸ்.ராஜா தலைமையில் நடை பெற்றது. நிகழ்ச்சியில் ஆலய செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் பந்தக்கால் நடுதல், முளைப்பாரி எடுத்தல், கங்கை திரட்டுதல், பால்குடம் எடுத்தல், காப்பு கட்டுதல், சக்தி கரகம் எடுத்தல், அக்னிகொப்பரை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.

பின்னர் அம்மனுக்கு கூழ்வார்த்தல், கும்பப் படையல், மஞ்சள் நீராட்டு போன்றவை நடை பெற்றது. இதில் ஆலய துணை செயலாளர் சாந்தகுமார், துணை தலைவர் எ.ஸ்.ராஜா மற்றும் கிராம பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். 

செய்தியாளர் – பாரத்குமார்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed