September 16, 2021

செங்குன்றம் அடுத்த, பாடியநல்லூர் ஸ்ரீ காயத்திரிதேவி ஞானேந்திரர் சித்தர்கள் பீடத்தில் ஆடிப்பூரம் விழா

1 min read
Spread the love

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சி ஈஸ்வரன் கோயில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காயத்ரிதேவி ஞானேந்திரர் சித்தர்கள் பீடத்தில் ஆடிப்பூரம் விழா சித்தர் அடியான் குருஜி ஜெ.பூபாலன் தலைமையில் நடை பெற்றது.

நிகழ்ச்சியில் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து வண்ணமலர்கள் மற்றும் திருஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் சுமங்கலி பெண்கள் அம்மனுக்கு சீர்வரிசைவுடன்  மங்கள வலைக்காப்பு மற்றும் சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.

அத்துடன் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஆலயம் சார்பில் வலைகாப்பு நிகழ்ச்சினை நடத்தி வைத்து வாழ்த்தினர். இதணைத்தொடர்ந்து காயத்ரிதேவி ஞானேந்திரர் சித்தர்கள் மற்றும் தெய்வங்களுக்கு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பாடியநல்லூர் சுற்றுவட்டார பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் மங்கள பொருட்களை வழங்கினர்.

நிருபர் – ப.பாரத்குமார்
நிழல் . இன் – 8939476777 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed