September 26, 2021

நாகைபட்டினத்தில், மனசாட்சி நட்புக் கரங்கள் டிரஸ்ட் நிகழ்வு, மஜக பொது செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு…

1 min read
Spread the love

மனசாட்சி நட்புகரங்கள் டிரஸ்ட் சார்பாக,
சாலையோரங்கள், பஸ், ரயில் நிலையங்கள், வீதி திண்ணைகளில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு போர்வைகளும்,
குடிசை வீடுகளில் வசிக்கும் நலிவடைந்தோருக்கு தார்ப்பாய்களும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான சேவை இன்று நாகை மாவட்டம் தோப்புத்துறையில் மஜக பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான, மு.தமிமுன் அன்சாரி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆதரவற்ற, வசதி இல்லாதவர்களுக்கு தார்பாய்கள் மற்றும் போர்வைகளை நேரடியாக சென்று வழங்கும் திட்டத்தின் சேவையினை மு. தமிமுன் அன்சாரி அவர்கள் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு போர்வைகளும், தார்பாய்களும் வழங்கினார்.

அதேபோல், உடல் உறுப்பு தானத்தை,
செம்போடை நேதாஜி மருத்துவமனையின் நிறுவனர், மருத்துவர் வி.ஜி.சுப்ரமணியன் அவர்கள் தொடங்கி வைத்தார். முதல் உடல் உறுப்பு தானத்தை, நாலுவேதபதி கே.ராஜேந்திரன் அவர்கள் வழங்கி, துவக்க விழா சான்றிதழை பெற்றுக் கொண்டார்.

மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் நிறுவனர் ஆர்.சம்பத் குமார் அவர்கள், தலைமை ஒருங்கிணைப்பாளர்
என். பாலமுரளி அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.முருகையன் அவர்கள் நன்றியுரைற்றினார்.

இதில், மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்ட துணை செயலாளர் ஷேக் அஹ்மதுல்லா மற்றும் மனசாட்சி நட்புகரங்கள் டிரஸ்டின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கே.சுந்தரமூர்த்தி, பி. சாக்ரடீஸ், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் பொருள்வை எல். கண்ணு வாப்பா, டெல்டா மண்டல ஒருங்கிணைப்பாளர் நாகக்குடையன் என். மணிவண்ணன், மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் வேளாங்கண்ணி
எல். அருள்ராஜ், தோப்புத் துறை எம்.இப்ராஹீம்,
நாலுவேதபதி கே.ராஜேந்திரன்,

மாவட்ட செய்தி தொடர்பாளர் விழுந்தமாவடி கே.என் அன்பு, துணை ஒருங்கிணைப்பாளர் கத்திரிப்புலம்

எம். ராஜேந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (மா.தி. சேவை) தோப்புத்துறை எ. சிக்கந்தர், வேதை நகர ஒருங்கிணைப்பாளர் செம்போடை எஸ்.குணபாலன், பொருளாளர் விழுந்தமாவடி ஜி. உதயகுமார், நகர இண ஒருங்கிணைப்பாளர்கள் நாலுவேதபதி ஆர்.ரவிக்குமார், கத்திரிப்புலம்
எஸ்.ரவிக்குமார், விமல் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

செய்திகள் – மணிவண்ணன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed