September 16, 2021

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே, மின்விளக்கு வசதி இல்லாததால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில், உயர்மின் விளக்கு பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அது அடிக்கடி பழுதாகி விடுகிறது.

அதேபோல் தற்போதும் அந்த உயர்மட்ட மின்விளக்கு தெரியாததால், அப்பகுதியை கடந்து செல்லக்கூடிய பயணிகளும், பொதுமக்களும் இருளில் நடமாட அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, உடனடியாக உயர் மின் விளக்கை எரிய வைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed