September 16, 2021

அருணாசலேசுவரர் திருக்கோயிலில், ஆடிப்பூரம் பிறம்மோற்சவ விழா, 10ம் நாள் உற்சவம், பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது…

1 min read
Spread the love

தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி
ஸ்தலமாக விளங்கும் எல்லாம் வல்ல அருள்மிகு ஸ்ரீ உண்ணாமுலை அம்மன் உடனாகிய அருள்மிகு ஸ்ரீ அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆடிப்பூரம் பிறம்மோற்சவ விழா கடந்த 1 ஆம் தேதி உண்ணாமுலை அம்மன் சன்னதி முன்பு தங்க கொடிமரத்தில்
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது,

பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலையும், மாலையும்
பராசக்தி அம்மன் திருக்கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு
காட்சி தருவது வழக்கம், அதன்படி இன்று பத்தாம் நாள் உற்சவத்தில் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருள உலகப் பிரசித்தி பெற்ற வளைகாப்பு விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆடிப்பூரம்
பிறம்மோற்சவ விழா பத்தாம் நாள் உற்சவத்தில் பராசக்தி அம்மனுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது,

அதனைத் தொடர்ந்து ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருள பராசக்தி அம்மனுக்கு பச்சரிசி மாவு மஞ்சள் அபிஷேக பொடி பால் தயிர் விபூதி பஞ்சாமிர்தம் தேன் எலுமிச்சைச்சாறு கரும்புச்சாறு சந்தனம் உள்ளிட்ட பல வகை அபிஷேகங்கள் செய்து சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் வளைகாப்பு உற்சவம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இந்த வளைகாப்பு உற்சாகத்தில் பக்தர்கள் கண்ணாடி வளையல்கள் தாலிச் சரடு, மஞ்சள், ஜாக்கெட் துணிகள், குங்குமம், சீப்பு, கண்ணாடி, போன்ற மங்களகரமான பொருட்களில் அம்பாள் பாதத்தில் வைத்து வளையல்களை அம்பாள் கையில் சாத்தி எடுத்துச் சென்று கர்ப்பிணிப் பெண்களுக்கும் சுமங்கலிப் பெண்களுக்கும் பிரசாதமாக வழங்கி மகிழ்ந்தார்கள்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed