September 26, 2021

செங்கத்தில், புத்தக கண்காட்சியை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் ம.பெ.கிரி திறந்து வைத்தார்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாரதி புத்தகாலயம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. செங்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற, புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்விற்கு, திருப்பத்தூர் தூய நெஞ்சக கல்லூரி பேராசிரியர் பி.குமார் தலைமை தாங்கினார்.

புத்தகக் கண்காட்சியை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் ம.பெ.கிரி திறந்து வைத்தார்.
மாவட்ட கல்வி அலுவலர் ப.விஜயகுமார், செங்கம் செயல் அலுவலர் லோகநாதன், எழுத்தாளர் ஜி.முருகன், மருத்துவர் எம்.ஸ்ரீதர், சிபிஎம் மாவட்ட செயலாளர் சிவக்குமார், தொழிற்சங்க தலைவர் எம்.வீரபத்திரன், சி.பி.எம் செயற்குழு உறுப்பினர் ராமதாஸ், வட்டார செயலாளர் ஏ.லட்சுமணன், அ.செயலாளர் குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed