September 25, 2021

அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் இருந்து ஆந்திராவுக்கு சமையல் எரிவாயு ஏற்றி சென்ற லாரி செங்குன்றம் அருகே நிலைத்தடுமாறி கவிழ்ந்து…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து 18 டன் சமையல் எரிவாயு நிரப்பிய டேங்கர் லாரி, ஆந்திர மாநிலம் கடப்பவுக்கு சென்ற போது, மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையின் கீழ் பகுதியில் சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல வளைவில் திரும்பிய போது, நிலைத்தடுமாறி அந்த டேங்கர் லாரி கவிழ்ந்தது.

லாரி விபத்துக்குள்ளான உடன் அதன் டிரைவர் சிவக்குமார் அங்கிருந்து தப்பி ஓடிப் போய்விட்டார். உடனடியாக, செங்குன்றம் தீயணைப்பு துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலையடுத்து, நிகழ்விடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

சோழவரம் காவல் துறையினர், சாலையில் தடுப்புகள் அமைத்து பொது மக்களும், வாகன ஓட்டிகளும் அருகில் செல்லாதவாறு மாற்று வழியில் அனுப்பி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 4 பொக்லைன் இயந்திரங்களின் உதவியோடு சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

இந்த விபத்து குறித்து சோழவரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed