September 16, 2021

75வது சுதந்திர விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.முருகேஷ் தேசிய கொடியை ஏற்றினார்…

1 min read
Spread the love

தொடர்ந்து காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முன்னதாக, திருவண்ணாமலை நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்தார்.

சுகாதார ஆய்வாளர்களுக்கு விருது,
எஸ்.பி அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை நகராட்சியில் மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு சிறப்பாக பணியாற்றிய திருவண்ணாமலை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், இரா.ஆல்பர்ட், வினோத் கண்ணா, எ.கார்த்திகேயன் ஆகியோர்களுக்கு, சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பி. முருகேஷ் கேடயம் மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினார்.

திருநேர் அண்ணாமலை கோயில் வாசலில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலை கோயில் வாசலில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு, எல்லப்ப சுவாமிகள் தலைமையில், சமூக ஆர்வலர் காமராஜ் முன்னிலையில், தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.கிரிவலப்பாதை சாதுக்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் இந்த தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed