September 26, 2021

கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற, 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்…

1 min read
Spread the love

நாட்டின் 75வது சுதந்திர தின விழா கும்மிடிப்பூண்டியில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள் மற்றும் பொது அமைப்பினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம்- கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் தலைமையில், சுதந்திர தின விழாவில் துணை தலைவர் மாலதி குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், நடராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் இந்திரா திருமலை, ரவிக்குமார், ஜெயச்சந்திரன், கௌரி ஹரிதாஸ், அமலா சரவணன், ஜோதி, கலா உமாபதி, வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் மாணிக்கம் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்றார். தொடர்ந்து ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் தேசிய கொடியேற்றிய நிலையில், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் சுதந்திர தின விழா சிறப்புரை ஆற்றி அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

அவ்வாறே கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் யமுனா தேசிய கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார். கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ந.மகேஷ் தேசிய கொடியேற்றினார். கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி அலுவலகத்தில் டி.எஸ்.பி எஸ்.ரித்து, கும்முடிப்பூண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி திலீப்பாபு தேசிய கொடியேற்றினார்.

ஊராட்சி மன்ற அலுவலகங்களில்- கும்மிடிப்பூண்டி அடுத்த எகுமதுரை ஊராட்சியில் எகுமதுரை, நாயுடுகுப்பத்தில் ஊராட்சி தலைவர் ஸ்ரீபிரியா மகேந்திரன் தேசிய கொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்புகள், எழுதுபொருட்கள் வழங்கினார்.
நிகழ்வில் ஊராட்சி செயலாளர் சோபன்பாபு, கிராம நிர்வாக அலுவலர் தசரதன் பங்கேற்றனர்.

அதே போல, ஆரம்பாக்கத்தில் ஊராட்சி தலைவர் தனசேகர் தலைமையிலும், ஊராட்சி செயலாளர் முரளி, வார்டு உறுப்பின நிஜாம் முன்னிலையில் தேசிய கொடியேற்றப்பட்டது. மாதர்பாக்கத்தில் ஊராட்சி தலைவர் சீனிவாசன் தலைமையிலும், மாநெல்லூரில் ஊராட்சி தலைவர் லாரன்ஸ் தலைமையிலும், கண்ணண் கோட்டையில் ஊராட்சி தலைவர் கோவிந்தசாமி தலைமையிலும், ஈகுவார்பாளையத்தில் ஊராட்சி தலைவர் உஷா ஸ்ரீதர் தலைமையிலும்,

சாணாபுத்தூரில் ஊராட்சி தலைவர் அம்பிகா பிர்லா தலைமையிலும், எஸ்.ஆர்.கண்டிகையில் ஊராட்சி தலைவர் ரேணுகா முரளி தலைமையிலும், கீழ்முதலம்பேட்டில் ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம் தலைமையிலும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

செய்தியாளர் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed