September 25, 2021

பெத்தநாயக்கன் பேட்டை பகுதியில், சாலை அமைக்கும் பணிகளை, எல்லாபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை ரமேஷ் தொடங்கி வைத்தார்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கிளாம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பெத்தநாயக்கன் பேட்டை பகுதியில் உள்ள ஏரிக்கரை தார் ஒன்றிய சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இச்சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக மாரி உள்ளதால் இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், இச்சாலையை சீரைமைக்க ரூ. 27 லட்சம் மதிப்பில் சாலையை ஆயிரம் மீட்டர் தூர அளவில் சாலை இரு புறங்கள் அகலப்படுத்தி தரமான புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணியை எல்லாபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை ரமேஷ் தலைமையில் பூஜை செய்யப்பட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.இதில் ஒன்றிய குழு உறுப்பினர் சியாமளா ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ், ஒப்பந்ததாரர் ராஜசேகர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed