September 16, 2021

கீழ்பென்னாத்தூரில், தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றிய அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்களின் எதிர்ப்பும், ஏமாற்றமும், தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, கண்டன உரையாற்றினர்.

கீழ்நாத்தூர்,தவசிகுளம் பகுதியில், ஆபத்தான மின் கம்பத்தால், அச்சத்தின் பிடியில் தவிக்கும் மக்கள்…

திருவண்ணாமலை அடுத்த கீழ்நாத்தூர் தவசிகுளம் பகுதியில் பொதுமக்களுக்கும், அப்பகுதியில் வாழும் சிறுவர்கள் மற்றும் வயதானவர்களுக்கும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் ஆபத்தான மின் கம்பத்தால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தின் பிடியில் தவித்து வருகின்றனர்.

எனவே, மின்வாரிய நிர்வாகம் உடனடியாக அந்த ஆபத்தான மின் கம்பத்தை மாற்றி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed