September 26, 2021

செங்குன்றத்தில், உயிர்பலி வாங்கும் நிலையில் உள்ள மின் கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை, மின் வாரியம் அலட்சியம்…

1 min read
Spread the love

செங்குன்றம் அப்துல் மரைக்காயர் தெருவில், ஒரு மின்கம்பம் பல மாதங்களாக சாய்ந்த நிலையில் உள்ளது. அதனால், அதன் அருகில் உள்ள வீடுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அப்பகுதியில் செல்வதற்கும் அச்சப்படுகிறார்கள். ஆபத்தான நிலையில் உள்ள அந்த மின் கம்பத்தை சீர் அமைத்து தரக்கோரி பல மாதங்களாக அப்பகுதி மக்கள் செங்குன்றம் பகுதி மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இது வரை அதை சரி செய்யாமல் அலட்சியமாக உள்ளனர்.

அதனால் வர கூடிய மழைக்காலங்களில் பலத்த காற்று அடித்தால் மின் கம்பம் சாலையில் விழுந்து விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே, உடனடியாக மின் கம்பத்தை சீரமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்குன்றம் மின்வாரிய அதிகாரிகளும், ஊழியர்களும் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைத்து கொடுக்க அலட்சியம் காட்டுவது ஏன்?

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed