September 25, 2021

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 89 வார்டு பாடி வட்ட வடிவ நகரில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையின் கர்ப்பிணி பெண்களுக்கு 7 ஆம் மாதம் ஊட்டச்சத்து பொருள்கள் கிடைக்காமல் கர்ப்பிணி பெண்கள் அவதி…

1 min read
Spread the love

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட
89 வார்டு பாடி வட்ட வடிவ நகரில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் மருத்துவம் பார்த்து வருகிறார்கள். அவர்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி போடுதல், ஸ்கேன் எடுத்தல், இரத்த பரிசோதனை செய்தல் போன்ற சேவைகளை இந்த மருத்துவமனையின் மூலம் பெற்று பயன் அடைந்து வருகிறார்கள். ஆனால், 7 வது மாதம் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கும் ஊட்டச்சத்து பொருள்கள் கிடைக்கவில்லை என்றும், இதில் வைட்டமின் மருந்துகள், டானிக் போன்றவைகளும் அடங்கும்
ஆனால் தற்போது மருத்துவமனையில் தொடர்ந்து ஊட்டச்சத்து பொருள்கள் தருவது கிடையாது என்றும் அங்கு வரும் கர்ப்பிணி பெண்கள் கூறுகிறார்கள்.

வசதி இல்லாத எங்களுக்கு மருத்துவமனையில் கொடுக்கும் இந்த பொருட்களை சரியாக எங்களுக்கு 7 ஆம் மாதத்தில் கொடுத்தால் எங்களுக்கு 10 ஆம் மாதம் பிறக்கும் குழந்தை சத்துள்ள குழந்தையாகவும் ஆரோக்கியமாகவும் எடை சரியாகவும் பிறக்கும். ஆனால், தொடர்ந்து மருத்துவமனையில் கேட்டால் 7 ஆம் மாதம் கொடுக்கும் ஊட்டச்சத்து பொருள்கள் மருத்துவமனைக்கு வரவில்லை வந்தவுடன் கொடுத்து விடுவோம் என்று தொடர்ந்து கூறிவருகிறார்கள். இன்று வரையிலும் கொடுக்கவில்லை. என்றும் சம்பந்தப்பட்ட மருத்துவ உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் கிடைக்க வழி செய்யுமாறு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்களின் பணிவான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed