September 26, 2021

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை யூனியன் பகுதியில், கொத்தடிமைகளாக்க சிறுவர்களை கடத்தியவர்கள் கைது…

1 min read
Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை யூனியன் பகுதியில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மாவட்டத்திலேயே கல்வி வளர்ச்சியில் பின்தங்கிய பகுதியாக இன்றளவும் உள்ளது. இப்பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் வறுமை காரணமாக பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களை புரோக்கர்கள் வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இதற்காக சேலம் , ஈரோடு, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து ஏராளமான புரோக்கர்கள் ஜவ்வாதுமலை பகுதிக்கு வருகின்றனர். இவர்கள் வறுமையில் வாடும் பெற்றோர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஒரு தொகையை கொடுத்து 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை பருத்தி தோட்டம் மற்றும் பனியன் கம்பெனிக்கு தொழிலாளர்களாக
அனுப்புகின்றனர்.

தற்போது கொரோனா ஊரடங்கால் பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் ஏராளமான குழந்தை தொழிலாளர்களை இந்த கும்பல் வெளி மாவட்டங்களை கடந்தி சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. ஜவ்வாது மலை கிராமத்தை சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்களை 2 புரோக்கர்கள் கடத்தி செல்வதாக திருவண்ணாமலை சைல்டுலைன் அமைப்புக்கு புகார் வந்தது. இதேபோல் கல்லாத்தூர் பகுதியை சேர்ந்த3 பெண் குழந்தைகளை ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை பனியன் கம்பெனிக்கு குழந்தை தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்படுவதாகவும் புகார் வந்தது.

இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பி. முருகேஷ் உத்தரவின் பேரில் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் (ஆக 17) மாலை ஜமுனாமரத்தூர் பஸ் நிலையம் அருகில்7 குழந்தை தொழிலாளர்களுடன் நின்றிருந்த 4 புரோக்கர்களை மடக்கிபிடித்தனர்.

பின்னர் அவர்களை ஜமுனாமரத்தூர் போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் சிறுவர்களை கடத்திச் செல்ல முயன்றவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் வெங்களாபுரத்தை சேர்ந்த ஹரி (46 )அவரது மனைவி கற்பகம்( 32) சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதி முத்துசாமி( 41) பெரம்பலூர் மாவட்டம் பாதங்கி கிராமத்தை சேர்ந்த அழகுவேல் ( 40) எனவும், இவர்கள் குழந்தை தொழிலாளர்களை கடத்தும் புரோக்கர்கள் என்றும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து
4 புரோக்கர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களால் கடத்தப்பட்ட 7 குழந்தைகளும் மீட்கப்பட்டு அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed